ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன் : குமார் சங்கக்கார உறுதி!!

467

SANGAKAARA

வாழ்க்கையில் தற்போதும் எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தான் அரசியலுக்கு வரப்போவதாக வெளியான செய்தியை நிராகரித்துள்ள சங்கக்கார, இது அடிப்படையற்றதும் பொறுப்பற்றதுமான செய்தி என குறிப்பிட்டுள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் சங்கக்கார இவ்வாறு அறிவித்துள்ளார்.

குமார் சங்கக்கார அரசியலுக்கு வரப்போவதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.