சிரியாவில் திருடன் ஒருவனை சாலையின் நடுவே அமரவைத்து அவனது கைகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவின் ரக்கா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள், தங்களது விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரக்கா நகரில் திருடன் ஒருவனை தீவிரவாதிகள் இன்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். முதலில் திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்த தீவிரவாதிகள், அவனை காரிலிருந்து அழைத்து வந்து மக்களின் முன்பு நிறுத்துக்கின்றனர்.
பின்னர் அவனை நாற்காலியில் அமரவைத்து கட்டி வைக்கின்றனர். அதே வேளையில் மற்றொரு தீவிரவாதி அந்நபர் புரிந்த குற்றங்களை பட்டியலிடுகிறான்.
இறுதியில் அறுவை சிகிச்சை நிபுணரான தீவிரவாதி ஒருவன்,கயிறுகளால் கட்டிய அவனது கைகளை தனித்தனியாக வெட்டுகிறான்.
அப்போது அந்த திருடன் துடித்துடிப்படியே கதறுகிறான். ஆனால் இக்காட்சியை அந்நகர மக்கள் சத்தமில்லாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
இதற்கிடையே யாரேனும் திருடினால் அவருக்கும் இதே கதி தான் என தீவிரவாதி ஒருவன் எச்சரித்துள்ளான்.








