3 வயது பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன் : டெல்லியில் நடந்த பயங்கரம்!!

602

Abuse

டெல்லியில் வீடு புகுந்து 3 வயது பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி அருகேவுள்ள‌ நொய்டாவில் ஜீவர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
3 வயது பச்சிளம் குழந்தை பலாத்காரம் செய்யபப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றவாளி நேற்று அக்குழந்தையின் வீட்டிற்குள் நுழைந்து இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த குழந்தை மயங்கிய நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்களால் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை இணை ஆணையர் அரவிந்த் குமார் சிங் இதுபற்றி கூறுகையில், ஜீவர் காவல் நிலையத்தில் அந்த குற்றவாளி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிசார் விசாரணையில், அந்த நபர் ஏற்கனவே 7 வயதான சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.