வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் வட மாகாண கல்வித்திணைக்களத்தின் அணுசரணையுடன் பௌர்ணமி விழா!!

582

Rambaikulam

வட மாகாண கல்வித்திணைக்களத்தின் அணுசரணையுடன் நடத்தப்படும். பௌர்ணமி விழா வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய அக்குவன்ஸ் கேட்போர் கூடத்தில் நாளை(05.03) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வவுனியா தெற்கு வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா தலைமையில் இந்த விழா இடம்பெற உள்ளது . இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்விப்பணிப்பாளர் ஆ.இராஜேந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினராக திருமதி பராசக்தி கணேசலிங்கம் ஆகியோர் கலந்து கொள்வர். இந்நிகழ்வில் விசேட தேவை உடையோரின் கலை நிகழ்வுகள் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.