வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!!

434

இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய ஆசிரியர்களின் உபயத்தில் இடம்பெற்ற வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!! 

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஏழாவது மகோற்சவ பெருவிழாவில் இன்றைய தினம் 04.03.2015 புதன்கிழமை தீர்த்த  திருவிழா இடம்பெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர்கல்லூரியின் இந்துமாமன்ற ஆசிரியர்களின் உபயத்தில்  தீர்த்த உற்சவம் காலை எழுமணியளவில்  ஆரம்பமானது. மேற்படி உற்சவத்தில் கல்லூரியின் ஆசிர்யர்கள் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர் . சுண்ணம் இடித்து கிரியைகள் இடம்பெற்று காலை பத்து  மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று காலை பதினோரு  மணியளவில் ஆலயத்தின் தீர்த்த கிணற்றடியில் கருமாரி நாகபூசணி சாமுண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள்   ஆலயத்தின் இரண்டாம் வெளிவீதி ஊடாக வந்தடைந்தனர்.

அங்கு தீர்தோற்சவம் இடம்பெற்று பெற்று அர்ச்சனைகள்  இடம்பெற்று பின்னர் மதியம் பன்னிரண்டு மணியளவில் யாகம் கலைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தீர்த்த உற்சவம் நிறைவு பெற்றது .மீண்டும் மாலை நாலரை மணியளவில் கொடியிறக்க உற்சவங்கள் ஆரம்பமாகி இரவு எட்டரை மணியளவில் கொடியிறக்கபட்டது.

படங்கள் :கஜன் 

8944_971320719554548_6938097614209422595_n 480556_971325326220754_7051688298875555134_n 996121_971325229554097_4763692137469689345_n 1908410_971324042887549_8000589049358318498_n 10167993_971321902887763_7689271750160285813_n 10313038_971323839554236_5959665819817198791_n (1) 10313038_971323839554236_5959665819817198791_n 10422455_971326489553971_4239180546340049803_n 10428659_971324956220791_7766678079472812651_n 10430898_971325989554021_1478871318349162050_n 10455194_971325279554092_5780503728418079874_n 10557198_971322546221032_7481153911601661749_n 10610532_971321429554477_6818830051030062916_n 10917816_971326729553947_4792708885597732992_n 10995380_971322186221068_7304593735101317919_n 11006467_971323009554319_3897392652846751389_n 11010596_971325189554101_5947391359413267_n 11017831_971325906220696_6435364751422642577_n 11018095_971325529554067_2608978426306613588_n 11018660_971325586220728_8672684329573314684_n 11034186_971321612887792_8707405718369592451_n 11039201_971321052887848_962023150884796668_n 11046819_971321679554452_8211269587839749215_n 11050300_971323992887554_758652779826448504_n 11053057_971320386221248_4893886090928480303_n