வவுனியா சூடுவெந்தபிலவு கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை தாருங்கள் என கோரி இன்று (06.03) சூடுவெந்தபிலவு பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
மீள்குடியேறிய தமக்கு 371 வீடுகள் வழங்க பட்டியலிடப்பட்டபோதிலும் பிரதேச செயலாளரினால் வீடுகள் வழங்கப்படவில்லை எனவும் தமக்கு கிடைக்க வேண்டிய வீடுகளை வேறு கிராமத்திற்கு பிரதேச செயலளார் மாற்றியுள்ளதாகவும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாகள் கோசமெழுப்பினர்.
இதேவேளை அமைச்சரொருவரினால் அரச வேலைவாய்ப்ப வழங்கப்பட்ட சிலர் தமக்குக்கும் தமது உறவினர்களுக்கும் சாதகமாக மாத்திரமே கிராமத்தில் செயற்படுவதாகவும் கருத்து தெரிவித்ததுடன் பிரதேச செயலாளரையும் கிராம சேவகரையும் இடமாற்றவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதேவேளை பிரதேச செயலளார் கிராமத்தில் நடத்திய கூட்டத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பியவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்து அவர்களை சிறையில் பிரதேச செயலாளர் அடைத்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இக் கிராம மக்களுடன் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் அதன் பின்னர் வீடு கிடைக்காதவிடத்து தொடுர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் தாம் ஈடுபடப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவாகள் மேலும் தெரிவித்தனர்.







