கிரியா சுவரில் பெயர் எழுதியதால் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மகளை விடுவிக்குமாறு தாயாா் கோாிக்கை!!

580

Sikiriya

சிகிரியா சுவரில் பெயர் எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் தயார் தனது மகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிகிரியா சுவரில் பெயர் எழுதிய மட்டக்களப்பைச் சேர்ந்த உதயசிறி என்ற பெண்ணுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையை தம்புள்ளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந் நிலையில் அந்த பெண்ணின் தயார் தனது மகளை விடுவித்து தருமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே குறித்த சுவர்களில் பலருடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையிலேயே தனது மகள் தெரியாமல் பெயரை எழுதியதாகவும் தண்டனைக்குரியதென தெரிந்திருந்தால் எழுதியிருக்க மாட்டாள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது உதவிக்கு யாரும் இல்லாமல் தனிமையில் வாடுவதாக குறிப்பிட்ட அந்த தாய், தான் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் இருப்பதாகவும் தனது மகள் வீடு திரும்பாவிட்டால் சாவதை தவிர வேறு எதுவும் தனக்கு செய்ய முடியவில்லை என்றும் உதயசிறியின் தயார் உருக்கமாக வேண்டியுள்ளார்.

அரசாங்கம் தனது மகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் தனது மகளின் பிரச்சினையை வெளிக்கொணர்ந்து அவளை விடுவித்து உதவவேண்டும் என்றும் உதயசிறியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.