வவுனியாவில் முதல் முறையாக பெருமெடுப்பில் மக்களுக்கு பரிசில்கள் வழங்கியும் உலங்குவானூர்தி மூலம் வவுனியா நகரின் அழகை வானில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பையும் நெஸ்டோ மோல்ட் பால்மா நிறுவனம் நேற்றைய தினம்(07.03.2015) வழங்கியிருந்தது.
வவுனியா தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் நெஸ்டோ மோல்ட் பால்மா நிறுவனம் வயது வேறுபாடின்றிசிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அனைத்து தரப்பினரையும் ஒழுங்குபடுத்தி போட்டி நிகழ்வுகளை நடாத்தியும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் அவர்களை குதூகலபடுத்த கூடிய விளையாட்டு திடல்களையும் உருவாக்கி வவுனியா மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது . மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பலபகுதிகளில் இருந்தும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் தமது பிள்ளைகளுடன் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டிருந்தனர்.
படங்கள் :கஜன்