இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் வங்கதேசத்தின் முகமதுல்லா சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இன்று நடக்கும் உலகக் கிண்ண ஏ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து- வங்கதேச அணிகள் விளையாடுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் இயன் மோர்கன் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால்(2), இம்ருல் கெய்ஸ்(2) ஏமாற்றினர்.பின் இணைந்த சவுமியா சர்கார், முகமதுல்லா ஜோடி பொறுப்பாக ஆடியது.
138 பந்துகளை சந்தித்த முகமதுல்லா, 7 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்களுடன் 103 ஓட்டங்கள் எடுத்தான் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் முதல் சதமடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார்.






