வவுனியாவில் மாகாணசபையால் திறக்கப்பட்ட பேக்கரி திறந்த தினமே மூடப்பட்டது!!

327

Backery

வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் திறக்கப்பட்ட பேக்கரி அன்றைய தினமே மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின், வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபா செலவில் வவுனியா, செட்டிகுளம், பிரமணாலங்குளம் பகுதியில் பேக்கரி ஒன்று அமைக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (06.02) திறந்து வைக்கப்பட்டது.

திறக்கப்பட்ட பேக்கரி அன்று மாலை முதலே மூடப்பட்டுள்ளது. திறப்பதற்காக மட்டுமே பேக்கரியில் ஒருநாள் உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றது. இது தொடர்பில் அப்பகுதி மக்களை கேட்ட போது..

இக் கிராமத்தைச் சோந்த 5 பேருக்கு வெதுப்பகம் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்கள் தற்போது இங்கு தான் உள்ளார்கள். ஆனால் இந்த பேக்கரியை 5 பேரிடமும் கொடுப்பதா அல்லது எவ்வாறு யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் நடத்தி வருமானத்தைப் பெறுவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை.

இதன் காரணமாகவே பேக்கரி மூடப்பட்டுள்ளது. திட்டமிடப்படாத நடவடிக்கையே இதற்குக் காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியா பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வெதுப்பகம் திறந்து வைப்பு!!(படங்கள்)