வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம்!!(படங்கள்)

1183

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம் ஒன்று நேற்று முன்தினம் (08.03) நடைபெற்றது.

இதனை வவுனியா தமிழ் மாமன்றம் ஏற்பாடு செய்திருந்தது. கவிதை எழுதும் முறைகள் மற்றும் கவிதைக்கான தேவைகள் என மேலும் பல விடயங்கள் எடுத்துக்காட்டப்பட்டிருந்தன.

வவுனியா தமிழ் மாமன்ற அங்கத்துவர்களால் நகர்த்தப்பட்ட இந் நிகழ்விற்கு கவிஞர்களான முல்லைத்தீபன், ஜெகன், மற்றும் மைதிலி தயாபரன், அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களினூடாகவும் கவிதைகளின் வகைகள், எழுதும் முறைகள் என்பன எடுத்துக்காட்டப் பட்டிருந்தன. மேலும் பல்வேறு ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் நயக்கப்பட்டு மாணவர்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டன.

1 2 34 5 6 7 8