வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு கோரி முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக முச்சக்கர வண்டியின் சாரதிகள் சிலர் எமது இணையத்திடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது வயது முதிர்ந்த சாரதிகள் மற்றும் தொடர்ச்சியாக வேட்டி சாரம் அணிந்து பழக்கபட்ட சாரதிகள் தம்மால் நீளக்காற்சட்டை அணிய முடியாது எனவும் அது தமக்கு பொருத்தமற்ற ஆடைவகை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சங்கமோ தம்மை அதை அணியுமாறு தெரிவிக்கின்றது என வருத்ததுடன் கூறியுள்ளனர்.
அரச தனியார் துறை வேறுபாடின்றி எல்லாத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களும் தற்போது தமக்கு தமக்கென சீருடைகளை அறிமுகபடுத்தியுள்ளமையால் முச்சக்கர வண்டிகள் சங்கமும் அவ்வாறானதொரு சீருடையை அறிமுகபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.