இலங்கை அணி 148 ஓட்டங்களால் அபார வெற்றி!!

427

SL

உலக கிண்ண போட்டியின் 35வது ஆட்டத்தில் இலங்கையும், ஸ்கொட்லாந்தும் இன்று ஹார்பட்டில் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இலங்கை அணி சார்பாக சங்கக்கார 124 ஓட்டங்களையும் டில்ஷான் 104 ஓட்டங்களையும் மத்தியூஸ் 54 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 350 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் 364 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய ஸ்கொட்லாந்து அணி 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் அடிப்படையில் இலங்கை அணி 148 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஸ்கொட்லாந்து அணி சார்பாக கொலிமேன் 70 ஓட்டங்களையும் மொம்மேசன் 60 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவன் குலசேகர மற்றும் சமீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.