குற்றங்கள் நடைபெறும் இடங்களில் பறந்து திரியும் நுளம்புகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி குற்றவாளிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய அறிவியல் ரீதியான முறை ஒன்றை ஜின் டெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி ருவான் இலேபெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இவ்வாறான முறைமை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நுளம்பு ஒருவரின் இரத்தத்தை குடித்து 24 மணிநேரத்திற்குள் அதனை பரிசோதித்து வெற்றிகரமன முடிவுகளை பெற முடியும். அதனை விட காலம் சென்றாலும் இதே போன்ற முடிவுகளை பெற முடியுமா என்பது குறித்து ஜின்டெக் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.
நுளம்பு இறந்தாலும் அது பரிசோதனைகளுக்கு தடையாக இருக்காது என பரிசோதனை செய்யும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் இது சம்பந்தமான விசாரணைகளை நடத்தி வெற்றிகரமான முடிவுகளை பெற்றுள்ளன. வெப்ப வலய நாடுகளிலேயே அதிகளவில் நுளம்புகள் காணப்படுகின்றன.
ஐரோப்பா போன்ற குளிர் வலய நாடுகளில் இருக்கும் நுளம்புகளுக்கும் வெப்பம் வலய நாடுகளில் இருக்கும் நுளம்புகளுக்கு பாரிய வித்தியாசங்கள் உள்ளன.
இலங்கைக்கு ஏற்ற வித்தில் பரிசோதனைகளை செய்து அதன் முடிவுகளை பயன்படுத்தியதாகவும் கலாநிதி ருவான் இலேபெரும குறிப்பிட்டுள்ளார்.