பிரித்தானியாவில் இலங்கையர் கொலை தொடர்பில் நால்வர் கைது!!

576

Police

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மிட்லேன்ட் – பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி அடிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் இலங்கை பிரஜையான 48 வயதுடைய அருணாச்சலம் அருனோதயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரதேச பரிசோதனை அறிக்கையில் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொலை சந்தேகத்தின் பேரில் பெட்வேர்த் பகுதி விடுதி ஒன்றில் பணிபுரியும் கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பேர்மிங்காம் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 20, 31 மற்றும் 39 வயதுடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மிட்லேன்ட் பொலிஸார் தெரிவித்தனர்.