ஆற்றில் விளையாடிய சிறுமியை கொலை செய்ய முயன்ற பேய் : திகிலூட்டும் புகைப்படங்கள்!! (வீடியோ)

765

அவுஸ்திரேலிய ஆற்றில் விளையாடிய சிறுமியை பேய் ஒன்று கொல்ல முயன்ற புகைப்படம் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கிம் டேவிசன் என்ற பெண் தன் 3 குழந்தைகள் மற்றும் ஜெஸ்ஸி லூ என்ற தோழியுடன் லோக்யர் நிதியில் விளையாட சென்றுள்ளார்.

அப்போது கிம்மின் குழந்தை ஒன்று யாரோ தன்னை தண்ணீருக்குள் மூழ்கடிக்க முயல்வதாக கூறியுள்ளார். எனினும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அனைவரும் விளையாடிவிட்டு விடு திரும்பியுள்ளனர்.

இதன்பின் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் கிம் பதிவேற்றம் செய்யும் வேளையில் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தன் குழந்தையின் பின்புறும் கருப்பு நிற கண்களுடன், முடியயை விரித்தப்படி கோரமான உருவத்தில் பேய் ஒன்று இருந்தது புலப்பட்டுள்ளது.

இதை பற்றி அவர் இணையத்தில் ஆராய்ந்தபோது, சுமார் 100 வருடங்களுக்கு முன்பு அந்த நதியில் 11 வயது சிறுமி இறந்ததாகவும், அதனால் அந்த இடம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த பயணம் எனக்கு பதற்றத்தை அதிகரிக்கிறது என்றும் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் பீதியுடன் கூறியுள்ளார்.

D1 D2