இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!!

425

Mathews1

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் உபாதை காரணமாக அவதிப்படுவதாக தெரிய வருகிறது.

ஸ்காட்லாந்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் விளாசிய மத்யூஸ் உபாதைக்குள்ளானார். இதனால் அவர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. இது குறித்த மத்யூஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அணி நிர்வாகம் மற்றும் வைத்தியர்களின் அறிவுறுத்தலின் பேரில் களத்தடுப்பிற்கு வரவில்லை. காயத்தன்மையை அறிவதற்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்த சில தினங்களுக்கு காயம் எந்தளவுக்கு சரியாகிறது என்பதை பார்க்க வேண்டும். உலக கிண்ண தொடரிலிருந்து விலக வேண்டி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை’ என்றார்.

எனினும் மெத்யூஸ் கால்இறுதியில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. காயம் காரணமாக இலங்கை அணியில் இதுவரை 5 வீரர்கள் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.