ஒஸ்கார் பிஸ்ட்டோரியஸ் காதலியை கொன்ற இடத்தின் படங்கள் கசிந்துள்ளன!

758

reuters

கடந்த பெப்ரவரியில் ஒஸ்கார்பிஸ்ட்டோரியஸ், அவரது காதலி ரீவா ஸ்டீன்காம்பை சுட்டுக்கொன்றார். குளியலறையில் இரத்த வெள்ளம் தேங்கியிருப்பதையும் கதவின் பிடிக்கு அருகே துப்பாக்கி ரவைகள் பாய்ந்த இரண்டு ஓட்டைகள் காணப்படுவதையும் அந்தப் படங்களில் காணமுடிகிறது.

அதேபோல படுக்கையறை, இரத்தக்கறை படிந்த படிக்கட்டுகளைக் காட்டும் படங்களும் காணப்படுகின்றன. தவறுதலாக சுட்டுவிட்ட நிலையில், இறந்துகொண்டிருந்த தனது காதலியை அவர் தூக்கிவந்ததை அந்தப் படங்கள் காட்டுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்கை நியூஸ் செய்திச் சேவைக்கு அந்தப் படங்கள் எவ்வாறு கசிந்தன என்பது தெரியாது என்று காவல்துறை கூறுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களில் பிஸ்ட்டோரியஸ் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். ஆனால், அவரது வழக்கின் முழுமையான விசாரணைகளுக்கு நீண்டகாலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.