வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் 2012இல் உயர்தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் அனுசரணையில் இன்று(12.03.2015 வியாழக்கிழமை ) காலை கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் அதிபர் திருமதி.ஜீ.நடராசா தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய பரிசளிப்பு வைபவத்தில் வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பிரதம விருந்தினராகவும் எஸ் .அரியரட்ணம் (அதிபர் கொழும்பு சென்மேரீஸ் கல்லூரி )சிறப்பு விருந்தினராகவும் வவுனியா இந்துக்கலூரியில் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியைகளான திருமதி செ .பரமசிவராஜா மற்றும் திருமதி.எம்.ஐ.செபஸ்டியாம்பிள்ளை ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். கல்வியில் சிறப்பான பெறுபேறுகளை பெற்றமாணவர்கள் மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்களும் இன்றையதினம் பரிசுகள் வழங்கி கௌரவிக்கபட்டனர்.