இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!!

494

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30அளவில் இலங்கையை வந்தடைந்தார். அவரை ஏற்றி வந்த விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. பிரதமர் மோடியை இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.

இந்தநிலையில் மோடி, பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்படுகிறார்.
கொழும்பில் இன்று அவர் முற்பகலில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

இதனையடுத்து மாலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
அத்துடன் பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதனையடுத்து நாளை அவர் வடக்குக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

1987 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வந்துள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

1 2 3