வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் வெள்ளி விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி!!(படங்கள்)

663

பாடசாலை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் நிதியுதவி நேற்று வியாழக்கிழமை (12.03) வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிதியுதவியை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிதியுதவியை வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பாடசாலை அதிபர் திருமதி.பத்மநாதன் அவர்களிடம் கையளித்தார். தொடர்ந்து மாணவர்களின் கல்வி நிலை, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், பாடசாலையின் பௌதீக வளங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை அதிபர், ஆசரியர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர் துரை, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் ஸ்ரீ.கேசவன், உறுப்பினர் ர.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG_7587 IMG_7588 IMG_7589 IMG_7600 IMG_7606 IMG_7607 IMG_7608 IMG_7611 IMG_7613 IMG_7618