பங்களாதேஷுடன் போராடி வென்றது நியூசிலாந்து அணி : காலிறுதியில் இந்திய அணியை சந்திக்கும் பங்களாதேஷ்!!

270

NZ

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று இடம்பெற்ற ஏ பிரிவு 37வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் போராடி வென்றுள்ளது.

ஹெமில்டன் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஸ் சார்பில் கடந்த இங்கிலாந்து அணியுடனான போட்டியில் சதம் அடித்த மஹுமுல்லா இப்போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்களைப் பெற்றார். சௌமிய சர்கார் 51 ஓட்டங்களையும் சபிர் ரஹிம் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் போல்ட், அன்டர்ஸன், எலைட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 289 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியபோதும் இடைநடுவில் விக்கெட்டுக்களை பறிகொடுத்ததால் போராட்டத்திற்கு மத்தியில் 48.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டிது.

நியூசிலாந்து சார்பில் மார்டின் கப்டில் 105 ஓட்டங்களையும் ரொஸ் டெய்லர் 56 ஓட்டங்களையும் பெற்றனர். இதன்படி நியூசிலாந்து அணி இந்த உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியான தமது ஆறாவது வெற்றியை பதிவு செய்து ஏ பிரிவில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.