வவுனியா மாவட்டத்தில் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறிக்கான நேர்முகத்தேர்வு!!

373

national-institute

சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடத்தப்படும் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியினை வவுனியாவில் நடாத்தும் பொருட்டு கடந்த மாதத்தில் உளசமூக முகாமைத்துவ நிறுவனத்தினால் க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் உளவளத்துணை பாடநெறிக்கு விண்ணப்பித்த மாணவர்களிற்கான நேர்முக தேர்வு வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தில் வருகின்ற புதன்கிழமை 18.03.2015 அன்று பி.ப 12.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக உளசமூக முகாமைத்துவ நிறுவனத்தின் இணைப்பாளர் பிரதாப் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இக்கற்கைநெறியை பயில விரும்பும் பயிலுனர்கள் தங்கள் கல்வித்தகமை சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களுடன் தங்கள் திறமையை உறுதி செய்யும் ஏனைய சான்றிதழ்களுடன் குறித்த நேரத்திற்கு சமூகம் தருமாறும் குறித்தபாடநெறிக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் குறித்த தினத்தில் சமூகம் தந்து தாங்கள் விண்ணப்பிக்க தவறியதற்கான காரணத்தை உறுதிப்படுத்துமிடத்து அவர்களும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலதிக தொடர்புகளுக்கு 0776750261 தவராசா தர்ஸன், பயிற்றுவிப்பு உத்தியோகத்தர், தேசியசமூக அபிவிருத்தி நிறுவனம் என்ற இலக்கத்திற்கோ அல்லது 0777396557 தர்மேந்திரா, சமூகசேவை உத்தியோகத்தர், பிரதேசசெயலகம், வவுனியாஎன்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்தார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது உளவளத்துணை துறையில் டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா பாடநெறிகளை வழங்குகின்ற ஒரேயொரு பல்கலைக்கழகமானிய ஆணைக்குழுவின் அங்கீகாரம்பெற்ற அரச நிறுவனம் என்பதுடன் இக்கற்கை நெறிகள் இரண்டு வருட காலப்பகுதிகளை தனிதனியே உள்ளடக்கியிருப்பதுடன் இவற்றுக்காக முறையே 50500.00 ரூபா மற்றும் 65500.00 ரூபா கற்கை நெறிக் கட்டணம் அறிவிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.