வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!! (படங்கள்)

824

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை (14.03) காலை 9.00 மணியளவில் முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி.குணராஜா சிவகுமாரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள், வினோத உடை நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

IMG_7709IMG_7715 IMG_7719 IMG_7738IMG_7753 IMG_7757 IMG_7772 IMG_7781 IMG_7790IMG_7797 IMG_7814 IMG_7819 IMG_7821 IMG_7826