Google Code சேவையை நிறுத்தும் கூகுள் நிறுவனம்!!

781

Google

மென்பொருட்களைத் தயாரிப்பதற்கான Tools, Application Programming Interfaces (APIs), மற்றும் தொழில்நுட்ப வளங்களை கூகுள் நிறுவனம் வழங்கி வந்தது.

2006ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவையை தற்போது முற்றிலுமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 12ம் திகதி முதல் புதிய திட்டம் ஒன்றில் மும்முரமாக களமிறங்கியுள்ளதன் காரணமாக Google Code சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி முதல் இச்சேவை நிறுத்தப்படவுள்ளது.