வடக்கு அமைச்சா்களைச் சந்திக்க மோடிக்கு நேரமில்லை : ஐங்கரநேசன் கவலை!!

681

ayngaranesan

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வடமாகாண அமைச்சா்களைச் சந்தித்து சம்பிரதாயபூா்வமாக மாத்திரமே கலந்துரையாடியதாகவும்,

இதனால் தமது பிரச்சினைகளை முழுமையாக எடுத்துக் கூற முடியவில்லை எனவும் வடமாகாண விவசாய அமைச்சா் பொ.ஐங்கரநேசன் தொிவித்தாா்.

யாழ் பொது நுாலக கேட்போா் கூடத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் அதற்கான எதிா்பாா்ப்புக்களுடன் அமைச்சா்கள் சென்றிருந்ததாகவும், தமது கோாிக்கைகளை முன் வைத்து கலந்துரையாடுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் போதாததனால் தமது கோாிக்கைகளை மகஜராக பிரதமா் மோடியிடம் கையளித்ததாகவும் தொிவித்தாா்.

மகஜரைப் பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமா் தமிழ் மக்கள் நலன் தொடா்பில் தான் மேலும் அக்கறை செலுத்துவதாக தொிவித்தாா் என அமைச்சா் ஐங்கரநேசன் மேலும் தொிவித்தாா்.