அயர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த பாகிஸ்தான் : காலிறுதிப் போட்டி அட்டவணை இணைப்பு!!

250

PAK

உலகக் கிண்ண கிரிக்கெட் பி – பிரிவு இறுதி லீக் ஆட்டத்தின் வாழ்வா? சாவா? போட்டியில், அயர்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் காலிறுதியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. இதேவேளை காலிறுதிக்கு தகுதி பெற்ற மற்றுமொரு அணியான மேற்கிந்திய தீவுகள் காலிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

3 லீக் போட்டிகளில் வென்றிருந்தாலும், ஓட்ட வீத அடிப்படையில் பின்னடவைச் சந்தித்ததால், காலிறுதி செல்லும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணியிடம் அயர்லாந்து இழந்தது.

இன்றை போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 238 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 46.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

அந்த அணியில் ஆரம்பம் மிகச் சிறப்பாக இருந்தது. ஷெசாத்தும் அகமதும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 120 ஓட்டங்களைச் சேர்த்தனர். ஷெசாத் 63 ஓட்டங்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து சோஹைல் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மிஸ்பா உல் ஹக்குடன் ஓட்ட குவிப்பைத் தொடர்ந்தார் அகமது.

மிஸ்பா உல் ஹக் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அகமது கடைசி வரை ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை குவித்தார். உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களை சேர்த்தார்.

முன்னதாக அயர்லாந்து தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களை சேர்த்தது. அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் வில்லியம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 107 ஓட்டங்களை குவித்தார். வில்சன் 29 ஓட்டங்களை சேர்த்தார். ஏனையோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஓட்டங்களை சேர்க்கவில்லை.

காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்..

பிரிவு ஏ: நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ்

பிரிவு பி: இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்

SA