ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன.
எச்.சி 782 பயணிக்கவிருந்த இரண்டு பயணிகளின் பயணப் பையை சோதனை செய்தபோது 2 கிலோ 521 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ஒரு கோடி 30 லட்சத்திற்கும் அதிகம் என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தங்க பிஸ்கட்களை வைத்திருந்த மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 39, 40 வயதுடைய இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக மீட்கப்பட்ட தங்கத்துடன் இரு சந்தேகநபர்களும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.






