6 வயது மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தை பொலிஸாரால் கைது!!

665

Abuse

தனது ஆறு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தை ஒருவரை (வயது29) சிலாபம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்கப்பள்ளி தெமட்டபிட்டிய எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைத்தே இக்குற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த தொலைபேசித் தகவல் ஒன்றினையடுத்து சந்தேக நபரான தந்தையைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட பரிசோதனைகளின் மூலம் குற்றம் புரியப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.