மண்ணெண்ணெய் குடித்த ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாப மரணம் : யாழில் சோகம்!!

1523

Baby

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில் மண்ணெண்ணெயை குடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒன்றறை வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தாய் விளக்குக்கு ஊற்றுவதற்காக கொண்டு வந்த மண்ணெண்ணெயை சிறுமி குடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது சிகிச்சைக்காக சிறுமி யாழ். வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எனினும் இவர் பலியாகியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டிதுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.