வவுனியா வடக்கு வலய கரபந்தாட்ட போட்டிகளில் கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலை ஆதிக்கம்!!

719

unnamed

வவுனியா வடக்கு வலய பாடசாலைகளுக்கு இடையிலான நடைபெற்ற வருடாந்த வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டிகளில் அனைத்து வயதுப்பிரிவுகளிலும் கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க. பாடசாலை ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இவ் கரப்பந்தாட்ட போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (17.03) ஓமந்தை மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அந்தவகையில் கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க. பாடசாலையை சேர்ந்த 19 வயது பெண்கள் பிரிவு 1ம் இடத்தையும், 17 வயது ஆண்கள் பிரிவு 1ம் இடத்தையும், 15 வயது ஆண்கள் பிரிவு 1ம் இடத்தையும், 17 வயது பெண்கள் பிரிவு 2ம் இடத்தையும், 19 வயது ஆண்கள் பிரிவு 2ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

இப் மாணவர்களை பாடசாலையின் உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் திரு.எம்.றொபேட் ஜோன்சன் அவர்கள் பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.

17 வயது பெண்கள் பிரிவில் மகிழங்குளம் பாடசாலை 1ம் இடத்தையும், 19 வயது ஆண்கள் பிரவில் புதுக்குளம் மகா வித்தியாலயம் 1ம் இடத்தையும் பெற்றுள்ளார்கள்.