8 வயது பெறாமகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது!!

695

Abuse

புத்தளம் வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 25 வயதான நபரை வண்ணாத்துவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வண்ணாத்துவில்லு – கரைத்தீவு பொம்மறிப்பு பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சிறுமியின் தாயாரின் மூத்த சகோதரியின் கணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய்க்கும் பணம் தருவதாக சிறுமியை ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ள சந்தேக நபர் அங்கு சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறுமிக்கு நேர்ந்த சம்பவத்தை அறிந்து கொண்ட தாய், சம்பவம் குறித்து வண்ணாத்துவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.