30 நிமிடங்களில் 444 கோழிக் கறியை உண்டு புதிய சாதனை படைத்த அதிசய நபர்!!

409

கோழிக்கறி உண்பதில் சிக்காகோ நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

அரை மணி நேரத்தில் அதிக கோழிக்கறி துண்டுகள் (இறகுப்பகுதி) உண்ணும் போட்டி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 23ஆவது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிக்காகோவைச் சேர்ந்த தொழில்முறை சாப்பாட்டு போட்டியாளரான பெட்ரிக் பெர்டோலெட்டியும் கலந்து கொண்டார்.

போட்டியில் இவர் நிர்ணயிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் 444 கறித்துண்டுகளை விழுங்கி விட்டார். இறுதி 2 நிமிடங்களில் மாத்திரம் இவர் 50 துண்டுகளை விழுங்கினார். அவர் உண்ட 444 கறித்துண்டுகள் என்பது புதிய சாதனையாக மாறியுள்ளது.

440 கறித்துண்டுகள் உண்டதே இதுவரை சாதனையாக இருந்தது. இந்த சாதனையை மொல்லி ஸ்குய்லர் என்பவர் படைத்திருந்தார்.

இந்நிலையில் மொல்லியின் சாதனையை முறியடித்தது குறித்து பெட்ரிக் கூறுகையில், ‘போட்டி முடிந்த போது சாப்பிட்டே எனக்கு வியர்த்து விட்டது. எனினும் அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் ஒரு துண்டு கூட நான் உண்ண வேண்டாம் என எனக்கு தெரியும்’ என்றார்.

11 12