ஜூன் மாதம் தொடக்கம் மஹாபொல புலமை பரிசில் 5000 ரூபாவாக அதிகரிப்பு!!

1073

Mahapola

மஹாபொல மாணவர் புலமைப் பரிசில் தொகையை 2500 ரூபாவில் இருந்து 5000 ரூபாவரை அதிகரிக்கும் திட்டம் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் மஹாபொல புலமைப் பரிசில் பெறாத மாணவர்களுக்கான 2000 ரூபா கொடுப்பனவை 2500 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 75,000 மாணவர்கள் நன்மை அடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.