கிரிக்கெட் பைத்தியம் ஒழியும்வரை இந்திய அணி தோற்றுக் கொண்டே இருக்க வேண்டும் :  ராம் கோபால் வர்மா!!

931

Ra

உலகக் கிண்ண அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கும்  சூழலில், அவர்களை வெறுப்பேற்றுவது போன்று ட்விட்டரில் எழுதியுள்ளார் சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம் கோபால் வர்மா.

என் நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும் வரை, இந்திய அணியை மற்ற அணிகள் தோற்கடித்துக் கொண்டே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நேற்று ட்வீட் செய்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘நாட்டு மக்களின் கிரிக்கெட் என்ற மோசமான வியாதியை குணப்படுத்துமாறு, என் நாட்டில் உள்ள எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்கிறேன். நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். ஏனென்றால் அது நாட்டிலுள்ள ஆண்களை வேலை செய்வதை நிறுத்திவிட்டு டிவி பார்க்க வைத்து விடுகிறது.

இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி. நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். அதைவிட அதிகமாக கிரிக்கெட்டை நேசிப்பவர்களை வெறுக்கிறேன்… இப்படிப் போகின்றது அவரது ட்வீட்கள்.

இவரது ட்வீட்களை பலரும் கடுமையாகத் திட்டியுள்ளனர். ராம் கோபால் வர்மா பிரபலதிற்காக இப்படிச் செய்வதாகவும், அவர் ஒரு சைக்கோ என்றும் பலர் திட்டியுள்ளனர்.

‘ராம் கோபால் வர்மா படங்கள் தொடர்ந்து படு தோல்வியைச் சந்திப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’ என்று ஒருவர் பதிலுக்கு ட்வீட்டியுள்ளார்.

இன்னொருவர், ‘உன்னுடைய படங்கள்தான் இந்த நாட்டுக்கே வியாதி.. தொடர்ந்து தோற்றுக் கொண்டே இரு’ என்று ட்வீட்டியுள்ளார். சிலர் அவர் ட்வீட்களுக்கு வரவேற்பும் தந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.

Ram