வவுனியா வெளிக்குளம் கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தின் சிரேஷ்ர ஆசிரியர் திருமதி.தேவராணி சிவராஜசேகரம் அவர்கள் தனது 60 வயது பூர்த்தியையும், சேவையில் இருந்து ஓய்வுபெறும் நிகழ்வினையும் சிறப்பிக்கும் முகமாக பாடசாலைச் சமூகம் 24.03.2015 செவ்வாய்கிழமை அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடியது.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களால் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு வரவேற்புரையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பிறந்தநாள் நிகழ்வாக கேக் வெட்டி பரிசில்கள் வழங்கப்பட்டு வாழ்த்துப்பா பாடசாலைஅதிபர் திரு P.கணேஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டு மதியபோசன நிகழ்வுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.











