கோலியின் மோசமான ஆட்டத்திற்கு சர்மாவை குற்றஞ்சாட்டக் கூடாது : கங்குலி!!

273

virat-and-anushka

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் விராட் கோலியின் மோசமான ஆட்டத்திற்கு அனுஷ்கா சர்மாவை குற்றம் சாட்டக்கூடாது. அவர்கள் காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் தலைவரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான சரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து கங்குலி மேலும் தெரிவிக்கையில்,

விராட் கோலியின் மோசமான ஆட்டத்துக்கு அனுஷ்கா சர்மாவை குற்றம் சாட்டக்கூடாது.
அவர் என்ன தவறு செய்தார்? அவர் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக ஏனைய வீரர்களின் குடும்பத்தினர் செல்வது போல் சென்றுள்ளார். அவர் மீது குற்றம் சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. சில குறைபாடுகள் உள்ளன. அதை களைய என்னவழி என்பதை ஆராய வேண்டும்.

ரவீந்திர ஜடேஜா துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

அவுஸ்திரேலிய வீரர்களான மெக்ஸ்வெல் , மிச்சல் ஜோன்சன் ஆகியோர் ஓட்டங்களைச் சேர்க்கின்றனர். அவர்களைப் போன்ற வீரர்கள் நம்மிடம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.