கஞ்சாவை கொண்டுச் சென்ற இளைஞரொருவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் : இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!!

607
Shooting
கஞ்சாவை கொண்டுச் சென்ற இளைஞரொருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாங்குளம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை மறித்து சோதனை செய்ய முற்பட்டபோது தப்பிச்செல்ல முற்பட்டவேளையிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவரிடம் கஞ்சா பொதியொன்று காணப்பட்டதாவும் தெரிவித்த பொலிஸார் காயமடைந்த ஆவரங்கால் புத்தூரை சேர்ந்த தட்சணாமூர்த்தி தர்சன் என்ற 26 வயது நபரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்தனர்.