உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!!

628

Food

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோரின் தொகை 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இதில் பாதிக்கப்பட்டோர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதில் ஐந்து பேரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

(25.3.2015) புதன்கிழமை தாழங்குடாப் பிரதேசத்திலுள்ள திருமண வீடொன்றில் நண்பகள் உணவு உட்கொண்டேரில் சிலர் உணவு ஒவ்வாமையினால் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் சத்தி போன்ற நோய்களினால் திடீர் சுகயீனமுற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை காலை முதல் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு திடீர் சுகயீனமுற்று அனுமதிக்கப்பட்டவர்களில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் குழந்தைகள் பெண்கள் என 80 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சிகிச்சைகள் இடம் பெற்றுவருவதாகவும் இவர்கள் ஆபத்தான நிலையில் இல்லையெனவும் டாக்டர் நாகலிங்கம் சுசில் குறிப்பிட்டார்.

மண்முனை மற்றும் தாழங்குடா ஆரையம்பதி போன்ற பிரசேதங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமுற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

புதன்கிழமை நண்பகள் தாழங்குடாவிலுள்ள திருமண வீட்டில் உணவு உட் கொண்ட வியாழக்கிழமை இவர்களுக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதாகவும் அங்கு கோழி இறைச்சியுடன் புரியாணி உணவு உட் கொண்டதாகவும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவபவர்கள் தெரிவித்தனர்.

திருமணம் வீட்டின் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் என குறித்த திருமண தம்பதிகளின் உறவினர்கள் அயலவர்கள் என பலரும் இங்கு அனுமதிக்கப்பட்டனர்.