நாட்டின் பல பாகங்களிலும் மழை : மின்னல் தாக்கமும் இருக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

668

Rain

சீரற்ற காலநிலையால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதோடு, நாடளாவிய ரீதியில் மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் பெய்யும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் அதிகூடிய மழைவீச்சியாக, சுமார் 150 மிமீ மழைவீச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை தற்போது பல பகுதிகளிலும் பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காற்றுடன், மின்னல் தாக்கமும் இருக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது