உலக கிண்ண இறுதிப்போட்டியில் நடுவராகும் முதல் இலங்கையர்!!

679

Kumar-Dharmasena

நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த குமார் தர்மசேன நடுவர்களில் ஒருவராக செயற்படவுள்ளார்.

இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் சிறந்த நடுவர் என தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்தைச் நடுவர் ரிச்சர்ட் கெட்டல்பரோ, நாளைய போட்டியில் மற்றுமொரு நடுவராக செயற்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ணத்தை நான்கு முறை வென்ற அவுஸ்திரேலியா நாளை முதல் முறையாக இறுதிப்போட்டியில் களம் இறங்கும் நியூசிலாந்து அணியுடன் மோதும்.