டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் பலமான குள்ள மனிதர் ஒருவர் 6 அடி உயரமான திருநங்கையொருவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.
டென்மார்க்கை சேர்ந்த 52 வயதான அன்டன் கிராஃப்ட் உலகின் சக்தி வாய்ந்த 5 மனிதர்களில் ஒருவராவார். ஆணழகனான இவர் பளுதூக்கும் போட்டியில் 4 முறை சாதனை படைத்துள்ளார்.
இவரது உயரம் 4 அடி 4 அங்குலம். ஆனால் தனது உடல் எடையை விட 4 மடங்கு அதிகமான எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார்.
நியூயோர்க்கில் வசிக்கும் இவர் புளோரிடா கடற்கரையில் இளைப்பாற சென்றுள்ளார். அங்கு ஆணாக பிறந்து திருநங்கையாக மாறிய சைனா பெல் என்ற திருநங்கையை சந்தித்தார்.
கடந்த சில மாதங்களாக சைனா பெல்லை காதலித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து சைனா பெல் கருத்துத் தெரிவிக்கையில், அன்டன் மிகவும் கவர்சிகரமானவர். அவர் எனக்கு கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
அவரும் வித்தியாசமானவர். நானும் வித்தியாசமானவள். இந்த வேறுபாடுகள் நன்மை பயக்கும். ஆண்மையானது உயரம் மற்றும் குள்ள உருவத் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை.
தன்னைவிட நான்கு மடங்கு எடையைத் தூக்கி சாதனை படைக்கும் ஆற்றல் கொண்டவரை மணப்பது என்பதை எண்ணி தாம் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அன்டன் கிராஃப்ட் கூறுகையில், திருநங்கையுடனான எனது வாழ்க்கை நன்றாக உள்ளது. ஏனெனில் அவர் ஆணாக பிறந்தவர். அவர் முடிந்தவரை பெண்ணாக செயல்படுகிறார்.
ஆனால் பெரும்பாலான பெண்கள் தாங்களை பெண்ணாகக் காட்டி கொள்ள மிகுந்த நேரத்தை செலவிடுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.