வவுனியாவில் வீதியோர வியாபாரங்கள் நகரசபையால் அகற்றப்பட்டன!!

702

Vav

வவுனியா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாடு நகரசபையினால் இன்று (31.03) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா நகர்ப் பகுதியில் வீதியோர வியாபாரம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனால் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்களின் நடமாட்டத்திற்கு பாரிய இடையூறாக உள்ளதாகவும் நகரசபைக்கு பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனையடுத்து, 23ஆம் திகதிக்கு முன்னர் வவுனியா நகர சபையுடன் தொடர்புகொண்டு வியாபாரத்திற்கான இடத்தை ஒதுக்கி கொள்ளுமாறும், வீதியோர வியாபாரத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் நகரசபையின் அறிவுறுத்தல்களை மீறி தொடர்ந்து வீதியோர வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் வகையிலேயே இன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.