இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மஹேல ஜெயவர்தனவிற்கு முக்கிய பதவி?

865

Mahela

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் கௌரவ பதவி ஒன்றை ஏற்றுக் கொள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்மூலம் இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்ற மஹேல எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த உலகக் கிண்ண போட்டியுடன் ஒருநாள் கிரிகெட் போட்டிகளில் இருந்து மஹேல ஓய்வு பெற்றுள்ளார். மஹேலவுக்கு தற்போது 37 வயது என்பது குறிப்பிடத்தக்கது.