இன்று நாட்டின் பல பகுதிகளில் காற்றுடன் மழை!

829

rain_copy_copy

 

 

 



 

 

 

நாட்டில் நிலவும் தென்மேற்குப் பருவக் காற்று பலமடைந் திருப்பதால் நாட்டின் பல பாகங்களில் மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காலநிலை நிலவும். இக்காலநிலை தற்பொழுது பலமடைந்திருப்பதால் மேற்கு- சப்ரகமுவ- மத்திய மற்றும் தென்மாகாணம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என வளி மண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.

புத்தளம்- குருநாகல் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதுடன்- மத்திய மாகாணத்தின் தென்சாரல் பகுதிகளில் மழையுடன் கடுமையான காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றுக்காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியா லத்தில் லக்ஷபான பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சியாக 82.5 மில்லி மீற்றர் பதிவாகியிருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றுக் காலை கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக பெரும்பாலான வீதிகள் வெள் ளத்தில் மூழ்கியதால் காலை வேளையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்த வாகன நெரிசல் காரணமாக காலையில் வேலைக்குச் செல்பவர்கள் கடும் சிரமங்களுக்கு முகங் கொடுத்ததுடன்- வாகன நெரிசல்களில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி ஏற் பட்டிருந்தது.

இதேவேளை- குருநாகல் கிரியுல்ல இங்கார டவுல்ல மத்திய கல்லூரியில் மின்னல் தாக்கி 14 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.