வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் இரதோற்சவத்தின் முத்தேர் பவனி (படங்கள் வீடியோ)!!

391

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா  நேற்று  வியாழக்கிழமை(02/04/2015) இடம்பெற்றது.

அதிகாலை ஐந்து மணிக்கு மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜா ராஜாராம் குருக்கள் தலைமையில் அபிசெகங்கள்ஆரம்பமாகி  கும்ப பூஜையும் காலை ஆறரைமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஏழு மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.

தொடர்ந்து காலை எட்டு மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி ஒன்பதுமணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர்  வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து  ஒன்பதரை மணியளவில் தமக்குரிய தேர்களில்  ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் மூன்று தேர்கள் ஓடுவது  வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில்  என்பது குறிப்பிடத்தக்கது.

 வவுனியா மாவட்டத்திலேயே மிக பெரிய சிவன்கோவிலான வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனிக்கு இலங்கையின் முதற்தர வானொலி சக்தி FM மற்றும் வவுனியா நெற் இணையம் என்பன ஊடக அனுசரணை வழங்கியிருந்தனர் .

 காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி  இருப்புக்கு காலை பதினோரு மணியளவில் வந்து சேர்ந்தது. மேற்படி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.

பின்னர் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல்  ஒரு மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து மதியம் இரண்டரை மணியளவில் பிராயசித்த  அபிசேகமும்  இடம்பெற்றது .


20150402_082544 20150402_091243 20150402_082632 20150402_093250 20150402_093151 20150402_093141 20150402_093040 20150402_091740

20150402_093420 20150402_095957 20150402_094453 20150402_094409 20150402_094308

20150402_100318 20150402_101633 20150402_100801 20150402_100658 20150402_100552

20150402_102523 20150402_104420 20150402_104216 20150402_102912 20150402_102739

20150402_104722 20150402_104742 20150402_105347 20150402_135501 20150402_135759  20150402_104216