வவுனியாவில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் மூவர் காயம்!!

1003

வவுனியா, புளியங்குளம், ஏ 9 வீதியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, புளியங்குளம் சந்திக்கு அண்மையில் ஏ 9 வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு பயணித்த மோட்டர் சைக்கிள் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் காயமடைந்து புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சிறிய டொல்பின் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மதகுடன் மோதி சுமார் 10 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவை தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

vavuniya vavuniya11