இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 110 கிலோ கஞ்சா மீட்பு!!

801

Kanja

இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக ராமேஸ்வரம் அருகேயுள்ள தீவுப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடலில் உள்ள சிங்கிலி தீவு மற்றும் மனோழி தீவில் ஏராளமான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமேஸ்வர சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குறித்த தீவுகளில் திங்கட்கிழமை சோதனை மேற்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 50 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பதுக்கி வைத்தது யார் என்பது தெரியாத நிலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.