வவுனியாவில் வீதியோரத்தில் இளைஞனின் சடலம் மீட்பு!!

612

Body

வவுனியா நெடுங்கேணி கந்தரோடை கிராமத்தில் வீதியோரத்தில் இருந்து இளைஞனொருவரின் சடலத்தினை நெடுங்கேணி பொலிசார் மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை காலை கந்தரோடை பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட இச் சடலத்தினை மீட்ட பொலிசார் தனியார் வாகனமொன்றின் மூலமாக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந் நிலையில் பொது வைத்தியசாலையில் மரணடைந்தவரின் மனைவியான பி.விஸ்னுகா இறந்தவர் 38 வயதுடைய அருளப்பு பிரகலாதன் என்ற தனது கணவரே என சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

இந் நிலையில் இந்த மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.