யேம­னி­லி­ருந்து 54 இலங்­கை­யர்கள் மீட்பு!!

582

SL

யேமன் நாட்­டி­லி­ருந்து 54 இலங்­கை­யர்கள் அர­சாங்­கத்­தினால் மீட்­கப்­பட்­டுள்ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. 43 இலங்கையர்கள் சீன கப்பல் மூலம் 6ஆம் திகதி ஜிபோ­டிக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர்.

இந்­தோ­னே­ஷி­யாவும், இந்­தி­யாவும் ஆறு இலங்­கை­யர்­களை மீட்­டுள்­ளனர். ஐந்து இலங்­கை­யர்கள் ஓமான் எல்­லைக்கு சென்று அங்­கி­ருந்து இலங்­கைக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளனர் என்றும் அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நைரோ­பி­யி­லுள்ள இலங்கை தூத­ர­கத்­தினால் நட­வ­டிக்கை செய­லகம் ஒன்றும் ஜிபோ­டியில் அமைக்­கப்­பட்­டுள்­ளது என்றும் வெளிவி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அந்த வகையில் ஜிபோ­டி­யி­லி­ருந்து 29 இலங்­கையர் நேற்று இலங்­கைக்கு அழைக்­கப்­பட்­டனர். அவர்­களை பிரதி வெளிவி­வ­கார அமைச்சர் விமா­ன­நி­லை­யத்தில் வர­வேற்றார்.

வெளிநாட்டு வேலை­வாய்ப்பு நலன்­புரி நிலை­யமும் வெளிவி­வ­கார அமைச்சும் இந்த விடயம் தொடர்பில் இணைந்து செயற்பட்டு வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.